முகப்பு

                 
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ 

அருணை ஜோதிடம் - ஓர் பார்வை 

           அருணை ஜோதிடம் 2005 ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஜோதிட ஸ்தாபனம். இந்நிறுவனம் ஜோதிட வல்லுநர் திரு பிசிஎம் ஸ்ரீனிவாசன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு சேவை அளித்துவருகிறது. ஜோதிட வல்லுநர் திரு பிசிஎம் ஸ்ரீனிவாசன் அவர்கள் 25 ஆண்டுகால ஜோதிட அனுபவம் மிக்கவர். பாரம்பரிய ஜோதிட குடும்பத்தை சேர்ந்த இவர் ஜோதிட கலையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் ஜாமக்கோள் ஜோதிடம், பாரம்பரிய ஜோதிடம், கேபி ஜோதிடம், திம்பச்சக்கர அணுகுமுறை மற்றும் நாடிஜோதிட முறைகளில்  சிறந்த அனுபவமிக்கவர்.


                  அருணை ஜோதிட நிறுவனத்தின் மூலம் இதுவரை 15000 ஜாதகங்கள் ஆய்வு செய்யப்பட்டு மக்களுக்கு சேவைபுரிந்துவரப்படுகிறது. மேலும் பல்லாயிர மக்களுக்கு சேவை புரியும் பொருட்டு தற்போது இந்த வலைப்பூவின் ஊடக இணைய சேவையை துவங்கியுள்ளது.

தொடர்புக்கு :

            அருணை ஜோதிட ஆராய்ச்சிமையம் 
             No. 24, பாரி நகர் விஸ்தரிப்பு 
             இச்சிக்காமலைப்பட்டி 
             திருச்சி - 620021

             அலைபேசி : +91 6380428692, +91 9952107483
             மின்னஞ்சல் : arunaijotidam@gmail.com

தொடர்புக்கு



தொடர்புக்கு 

ஜோதிடர் P.C.M. ஸ்ரீனிவாசன், M.E., M.A. (Astro),
அருணை ஜோதிட ஆராய்ச்சி மையம் 
எண் 24, இச்சிக்காமலைப்பட்டி
ஓலையூர் சாலை 
கே. சாத்தனூர் அஞ்சல் 
திருச்சி - 620021

கைபேசி : 9952107483, 6380428692
மின்னஞ்சல்: arunaijotidam07@gmail.com 

KP ஜோதிடம்



                கே .பி . ஜோதிட அணுகுமுறை 


                  கே.பி . ஜோதிட அணுகுமுறை என்பது தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள சிறுவையூறு கிராமத்தில் 1-11-1908 ல் பிறந்த திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஜோதிட முறையாகும். இதை சுருக்கமாக கே.பி.ஜோதிடம் என்பர்.
                       இந்த முறையின் முக்கிய விதி உபநட்சத்திர பகுப்பு முறையாகும். 
நட்சத்திரம் அனைவரும் அறிந்ததே. உபநட்சத்திரம் என்றால் ஜோதிடர்கள் தவிர பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. பாரம்பரிய ஜோதிட விம்சோத்தரி திசையை தசா புத்தி அந்தரங்களாக பகுப்பர். இவற்றையே சற்று பெயர் மாற்றம் செய்து, பகுத்து நட்சத்திரம், உபநட்சத்திரம், உப உப நட்சத்திரம் என திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியுள்ளார்.
                      பாரம்பரிய முறையில் ஒரு விதியை மட்டும் ஜோதிடர்கள் எடுத்துக்கொண்டு பலன்கள் கூறுவர். அதாவது, "நடப்பு புத்தி நாதன், எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் உள்ளாரோ, அந்த சார  கிரகம் நின்ற பலனையும், அந்த சார  கிரகம் ஆதிபத்தியம் பெற்ற பாவ பலனையும் ஜாதகர் அந்த புத்தி காலத்தில் அனுபவிப்பார்" என்பதே. இது மிகவும் எளிமையான விதியும் கூட. திரு.கே.எஸ்.கே அவர்கள் இந்த ஒரு விதியை மட்டும் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பாவ பலனை அந்த பாவத்தின் ஆரம்பமுனை உபநட்சத்திராதிபதியே நிர்ணயம் செய்வார் என முடிவு செய்துள்ளார். இதன்படி, பல சூட்சமமான கேள்விகளுக்கு விளக்கமும் தந்துள்ளார்.
                                இம்முறையினால் ஜோதிட சாஸ்த்திரத்தில் தோராயமாக பதில் கூறாமல், இன்ன தேதியில், இன்ன மணியில், இன்ன நிமிடத்தில், இது நடக்கும், அல்லது நடக்காது என துல்லியமாக பலன் கூறி நிரூபித்துள்ளார்.
                           கி.மு. , கி.பி. என எவ்வாறு கூறுகிறோமோ, அதே போல் கே.எஸ்.கே.விற்கு முன், கே.எஸ்.கே.விற்கு பின் என ஆணித்தரமாகவே கூறலாம். ஜோதிடத்தில் இது ஒரு மைல் கல்லே ஆகும்.

                               

நாடி ஜோதிடம்




 நாடி ஜோதிடம் - ஓர் அறிமுகம் 
---------------------------------------------------

                        

இம் முறை யோகங்களைப் பற்றி சற்று ஆராய்வோம்.

முதலில் யோகங்கள் என்றால் என்ன?

            எந்த ஒரு ஜாதகமானாலும் யோகங்களின் கூட்டு பலனால்தான், ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுகிறான் அது மட்டுமல்ல, நமது முன்னோர்கள் தீய பலன்களின் கூட்டையும் யோகமாகவே கருதுகின்றனர்.. இதிலிருந்து அறிவது என்னவென்றால், நன்மையும், தீமையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது கருத்து.

யோகங்களின் வகைகள்

            1.சுனபா         2.அனபா        3.துருதுரா      4.கேம துர்ம               5.அதி              6.அமல            7.வேசி            8.வாசி            9.உபயசாரி               10.அம்ச         11.சச  12.மாளவிக   13.பத்ர            14.ருச்சிக       15.ஜெய         16.கஜகேசரி  17.பந்தன       18.சகட          19.கிரஹமாலிகா            20.நள             21.முசல         22.வல்லகி     23.ரஜ்ஜு       24.பாச           25.தாமினி     26.கேதார            27.சூல            28.யுக             29.கோல        30.காலசர்ப   31.விபரீத ராஜ          32.சதுரஸ்ர            33.சந்திர மங்கள       34.குரு சந்திர 35.நீசபங்க ராஜ        36.அகண்ட

சாம்ராஜ்ய                 37.தர்மகர்மாதிபதி               38.பரிவர்த்தனை      39.தேனு         40.புஷ்கல            41.முக்தி         42.ஸ்ரீ நாத     43.சக்கரவர்த்தி         44.கனக         45.ரவி                        46.விரிஞ்சி            47.வசுமதி      48.சரஸ்வதி               49.சங்க          50.ராஜ           51.பூமி பாக்கிய        52.லட்சுமி            53.வரிஷ்ட     54.கலா நிதி               55.தரித்திர     56.திரிலோசன          57.பாபகத்திரி            58.பர்வத        59.அரச          60.பிரம்ம       61.வசீகர        62.காம           63.கௌரி      64.மாருத            65.சுமந்திர     66.அசுபர       67.யௌவன             68.சாமர         69.நாக           70.குருசண்டாள            71.அஷ்டலட்சுமி      72.கபட          73.லட்சுமி      74.காலசர்ப   75.குபேர       76.ஸ்ரீ கட            77.விஷக்கன்னிகா               78.அமாவாசை          79.ரோக கிரஹஸ்தா            80.அரச கேந்திர            81.வீணா       82.கேதார      83.அன்னதான          84.விமலா

            யோகங்கள்

[குறிப்பு: ஒவ்வொன்றின் இருதியிலும் யோகம் என்று சேர்த்து வாசிக்கவும்]

இனி சற்று விரிவாகக் காண்போம்.

சந்திரனால் ஏற்படக்கூடிய யோகங்கள்:

1.சுனபா யோகம்:     ஒரு ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 2-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது தவிர வேரு கிரகங்கள், அதாவது, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த 5 கிரகங்களுக்கும், நிற்கின்ற வீடு பகை, நீசம் இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு.

பலன்: இந்த யோகம் அமையப் பெறுபவர், சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல கூர்மையான அறிவு உண்டு. பேரும், புகழும் உடையவர். மிகுந்த சொத்துக்களும், சுகங்களும் அமையப்பெற்றவர்.

2.அனபா யோக்ம்: ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 12-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது தவிர வேரு கிரகங்கள், அதாவது, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த 5 கிரகங்களுக்கும், நிற்கின்ற வீடு பகை, நீசம் இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு.

பலன்:              இந்த யோகம் அமையப் பெறுபவர் சிறந்த உடல்வாகுடன், கம்பீரமான பார்வையுடன் இருப்பார். தர்ம சிந்தனை உள்ளவர். பேரும், புகழும் அடைவார்.

3.துருதுரா யோகம்: ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் சூரியன், ராகு, கேது தவிர வேரு கிரகங்கள், அதாவது, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த 5 கிரகங்களுக்கும், நிற்கின்ற வீடு பகை, நீசம் இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு.

பலன்: பொன், பொருள், செல்வம் சேர்க்கை உள்ளவர். நல்ல வசதியான உன்னதமான வாழ்க்கை வாழ்வர். மிகுந்த கடமை உணர்வு உள்ளவர்.

4.கேமதுரும யொகம் : ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் எந்த கிரகங்களும் நிற்காமல் இருந்தால்  இந்த யோகம் உண்டாகிறது.

பலன் : இந்த யொகம் உடையவர்கள் மிக துர்பாக்கியனாவார். ஏனென்றால், வாழ்வின் பெரும் பகுதியை துக்கத்திலேயே கழிப்பார். மிக வறுமையில் வாடுவார்.

5அதி யோகம்: சந்திரனுக்கு 6-7-8 –ம் இடங்களில் சுப கிரகங்கள் நிற்பதினால் இந்த யோகம் உண்டாகிறது. சுப கிரகங்கள் என்பது குரு,சுக்கிரன்,சுபரோடு கூடிய அல்லது பார்கப்பட்ட புதன் ஆவர்.

பலன்: மி நேர்மை உள்ளம் கொண்டவர். நாணயம் மிக்கவர். மிகுந்த சுக போகங்களை அனுபவிப்பார். ஞானிகளாலும், அறிஞர்களாலும் பாராட்டு பெருபவர்.

6.அமல யோகம்: லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 10-ம் இடத்தில் சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,புதன் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது.

பலன்: எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவார். மிகுந்த ஆற்றல் உடையவர். குன்றாத புகழும், வற்றாத செல்வமும் உடையவர். மிக நல்லவர். வல்லமை உடையவர் என எல்லோராலும் போற்றப்படுபவர்.

மற்ற் யோகங்களைப் பற்றி அடுத்ததாகக்  காண்போம்.

வாழ்க வளமுடன்

நாடி ஜோதிடம் ஒரு பார்வை

  ஜோதிடம் நமக்குத் தெரியும் , அது என்ன நாடிஜோதிடம் ?…   பொதுவாக , ‘ நாடி ஜோதிடம்’ என்பதற்கு , நாடி ஜோதிட நிலையத்திற்கு நாடி வருபவர்களுட...