கே .பி . ஜோதிட அணுகுமுறை
கே.பி . ஜோதிட அணுகுமுறை என்பது தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள சிறுவையூறு கிராமத்தில் 1-11-1908 ல் பிறந்த திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஜோதிட முறையாகும். இதை சுருக்கமாக கே.பி.ஜோதிடம் என்பர்.
இந்த முறையின் முக்கிய விதி உபநட்சத்திர பகுப்பு முறையாகும்.
நட்சத்திரம் அனைவரும் அறிந்ததே. உபநட்சத்திரம் என்றால் ஜோதிடர்கள் தவிர பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. பாரம்பரிய ஜோதிட விம்சோத்தரி திசையை தசா புத்தி அந்தரங்களாக பகுப்பர். இவற்றையே சற்று பெயர் மாற்றம் செய்து, பகுத்து நட்சத்திரம், உபநட்சத்திரம், உப உப நட்சத்திரம் என திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியுள்ளார்.
பாரம்பரிய முறையில் ஒரு விதியை மட்டும் ஜோதிடர்கள் எடுத்துக்கொண்டு பலன்கள் கூறுவர். அதாவது, "நடப்பு புத்தி நாதன், எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் உள்ளாரோ, அந்த சார கிரகம் நின்ற பலனையும், அந்த சார கிரகம் ஆதிபத்தியம் பெற்ற பாவ பலனையும் ஜாதகர் அந்த புத்தி காலத்தில் அனுபவிப்பார்" என்பதே. இது மிகவும் எளிமையான விதியும் கூட. திரு.கே.எஸ்.கே அவர்கள் இந்த ஒரு விதியை மட்டும் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பாவ பலனை அந்த பாவத்தின் ஆரம்பமுனை உபநட்சத்திராதிபதியே நிர்ணயம் செய்வார் என முடிவு செய்துள்ளார். இதன்படி, பல சூட்சமமான கேள்விகளுக்கு விளக்கமும் தந்துள்ளார்.
இம்முறையினால் ஜோதிட சாஸ்த்திரத்தில் தோராயமாக பதில் கூறாமல், இன்ன தேதியில், இன்ன மணியில், இன்ன நிமிடத்தில், இது நடக்கும், அல்லது நடக்காது என துல்லியமாக பலன் கூறி நிரூபித்துள்ளார்.
கி.மு. , கி.பி. என எவ்வாறு கூறுகிறோமோ, அதே போல் கே.எஸ்.கே.விற்கு முன், கே.எஸ்.கே.விற்கு பின் என ஆணித்தரமாகவே கூறலாம். ஜோதிடத்தில் இது ஒரு மைல் கல்லே ஆகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.