இம் முறை யோகங்களைப் பற்றி சற்று ஆராய்வோம்.
முதலில் யோகங்கள் என்றால் என்ன?
எந்த ஒரு ஜாதகமானாலும் யோகங்களின் கூட்டு பலனால்தான், ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுகிறான் அது மட்டுமல்ல, நமது முன்னோர்கள் தீய பலன்களின் கூட்டையும் யோகமாகவே கருதுகின்றனர்.. இதிலிருந்து அறிவது என்னவென்றால், நன்மையும், தீமையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது கருத்து.
யோகங்களின் வகைகள்
1.சுனபா 2.அனபா 3.துருதுரா 4.கேம துர்ம 5.அதி 6.அமல 7.வேசி 8.வாசி 9.உபயசாரி 10.அம்ச 11.சச 12.மாளவிக 13.பத்ர 14.ருச்சிக 15.ஜெய 16.கஜகேசரி 17.பந்தன 18.சகட 19.கிரஹமாலிகா 20.நள 21.முசல 22.வல்லகி 23.ரஜ்ஜு 24.பாச 25.தாமினி 26.கேதார 27.சூல 28.யுக 29.கோல 30.காலசர்ப 31.விபரீத
ராஜ 32.சதுரஸ்ர 33.சந்திர மங்கள 34.குரு
சந்திர 35.நீசபங்க
ராஜ 36.அகண்ட
சாம்ராஜ்ய 37.தர்மகர்மாதிபதி 38.பரிவர்த்தனை 39.தேனு 40.புஷ்கல 41.முக்தி 42.ஸ்ரீ நாத 43.சக்கரவர்த்தி 44.கனக 45.ரவி 46.விரிஞ்சி 47.வசுமதி 48.சரஸ்வதி 49.சங்க 50.ராஜ 51.பூமி பாக்கிய 52.லட்சுமி 53.வரிஷ்ட 54.கலா
நிதி 55.தரித்திர 56.திரிலோசன 57.பாபகத்திரி 58.பர்வத 59.அரச 60.பிரம்ம 61.வசீகர 62.காம 63.கௌரி 64.மாருத 65.சுமந்திர 66.அசுபர 67.யௌவன 68.சாமர 69.நாக 70.குருசண்டாள 71.அஷ்டலட்சுமி 72.கபட 73.லட்சுமி 74.காலசர்ப 75.குபேர 76.ஸ்ரீ கட 77.விஷக்கன்னிகா 78.அமாவாசை 79.ரோக
கிரஹஸ்தா 80.அரச கேந்திர 81.வீணா 82.கேதார 83.அன்னதான 84.விமலா
யோகங்கள்
[குறிப்பு: ஒவ்வொன்றின் இருதியிலும் யோகம் என்று சேர்த்து வாசிக்கவும்]
இனி சற்று விரிவாகக் காண்போம்.
சந்திரனால் ஏற்படக்கூடிய யோகங்கள்:
1.சுனபா யோகம்: ஒரு
ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 2-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது தவிர வேரு கிரகங்கள், அதாவது, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த 5 கிரகங்களுக்கும், நிற்கின்ற வீடு பகை, நீசம் இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு.
பலன்: இந்த யோகம் அமையப் பெறுபவர், சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல கூர்மையான அறிவு உண்டு. பேரும், புகழும் உடையவர். மிகுந்த சொத்துக்களும், சுகங்களும் அமையப்பெற்றவர்.
2.அனபா யோக்ம்: ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 12-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது தவிர வேரு கிரகங்கள், அதாவது, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த 5 கிரகங்களுக்கும், நிற்கின்ற வீடு பகை, நீசம் இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு.
பலன்: இந்த
யோகம் அமையப் பெறுபவர் சிறந்த உடல்வாகுடன், கம்பீரமான பார்வையுடன் இருப்பார். தர்ம சிந்தனை உள்ளவர். பேரும், புகழும் அடைவார்.
3.துருதுரா யோகம்: ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் சூரியன், ராகு, கேது தவிர வேரு கிரகங்கள், அதாவது, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த 5 கிரகங்களுக்கும், நிற்கின்ற வீடு பகை, நீசம் இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு.
பலன்: பொன், பொருள், செல்வம் சேர்க்கை உள்ளவர். நல்ல வசதியான உன்னதமான வாழ்க்கை வாழ்வர். மிகுந்த கடமை உணர்வு உள்ளவர்.
4.கேமதுரும யொகம் : ஜாதகத்தில் சந்திரன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் எந்த கிரகங்களும் நிற்காமல் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.
பலன் : இந்த யொகம் உடையவர்கள் மிக துர்பாக்கியனாவார். ஏனென்றால், வாழ்வின் பெரும் பகுதியை துக்கத்திலேயே கழிப்பார். மிக வறுமையில் வாடுவார்.
5அதி யோகம்: சந்திரனுக்கு 6-7-8 –ம் இடங்களில் சுப கிரகங்கள் நிற்பதினால் இந்த யோகம் உண்டாகிறது. சுப கிரகங்கள் என்பது குரு,சுக்கிரன்,சுபரோடு கூடிய அல்லது பார்கப்பட்ட புதன் ஆவர்.
பலன்: மி க நேர்மை உள்ளம் கொண்டவர். நாணயம் மிக்கவர். மிகுந்த சுக போகங்களை அனுபவிப்பார். ஞானிகளாலும், அறிஞர்களாலும் பாராட்டு பெருபவர்.
6.அமல யோகம்: லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 10-ம் இடத்தில் சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,புதன் நின்றால் இந்த யோகம் உண்டாகிறது.
பலன்: எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவார். மிகுந்த ஆற்றல் உடையவர். குன்றாத புகழும், வற்றாத செல்வமும் உடையவர். மிக நல்லவர். வல்லமை உடையவர் என எல்லோராலும் போற்றப்படுபவர்.
மற்ற் யோகங்களைப் பற்றி அடுத்ததாகக் காண்போம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.